Watch : வளர்ப்பு நாய், சேவல் உட்பட 7பேர் கொண்ட மொத்த குடும்பமும் ஒரே வாகனத்தில் பயனம்!

உலக மக்கள் தொகை எந்தளவிற்கு அதிகரித்துக் கொன்று இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோதான் சாட்சி. மொத்த குடும்பமும் மட்டுமின்றி அவர்களது வளர்ப்பி நாயும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

First Published Nov 21, 2022, 11:29 AM IST | Last Updated Nov 21, 2022, 11:29 AM IST

பொதுவாக இந்தியாவில் பொருளாதார சிக்கலில் இருக்கும் குடும்பத்தினர், இடம் விட்டு இடம் சென்று பிழைக்கும் மக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம். சிலர் மொத்த குடும்பத்தினரும், தங்களது இரு சக்கர வாகனங்களில் ஏற்றி செல்வது உண்டு. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வட இந்தியாவில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. குடும்பத் தலைவர் வாகனம் ஓட்டிச் செல்கிறார். ஐந்து குழந்தைகள் மற்றும் அவரது மனைவி அமர்ந்து இருக்கிறார். இத்துடன் இரண்டு நாய்கள், ஒரு சேவலும் அவர்களுடன் சவாரி செய்கின்றன. மேலும், அவர்களது பொருட்களும் வாகனத்தில் அடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோ தற்போது 10.4 லைக்குகளையும், 1569 ரீடுவீட்களையும் பெற்றுள்ளது. இன்னும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இது மனித குலத்தின் கனிவுக்கு எடுத்துக் காட்டு என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் தனது குடும்பத்திற்கு இணையாக வளர்ப்பு நாய், சேவலுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து இருப்பதுதான். இவ்வாறு செல்வது தவறுதான் என்றாலும், குடும்ப பொருளாதார சுமை தான் காரணம் என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.