மின்வாரிய ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது - ஆளுநர் விளக்கம்

புதுச்சேரியில் மின்சார வாரியம் தனியார்மயமாவதால் அதில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு சட்டப்படி பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

First Published Sep 30, 2022, 5:11 PM IST | Last Updated Sep 30, 2022, 5:11 PM IST

புதுச்சேரியில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சூழலை சமாளிக்கும் வகையில் மாநில முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை பேசுகையில் மின்சார வாரியம் தனியார்மயமாவதால் அதில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு சட்டப்படி பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்று அளுநர் உறுதி அளித்துள்ளார்.

Video Top Stories