Wayanad Landslide | வயநாடு நிலச்சரிவு கழுகுப் பார்வை காட்சிகள்! கொடூரத்தின் உச்சம்!

வயநாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து ஏராளமனோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

First Published Jul 30, 2024, 4:48 PM IST | Last Updated Jul 30, 2024, 4:48 PM IST

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  மழையானது கொட்டித்தீர்த்து வருகிறது.  அங்குள்ள பெரும்பாலான நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பியுள்ளன. இதனால் கடந்த ஒரு சில வாரங்களாகவே பல இடங்களில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.  முண்டக்கை பகுதியில் அமைந்திருக்கும் ரிசார்ட் ஒன்றில் அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது.  அப்போது மிகப்பெரிய பாறைகள் உருண்டோடியது. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகின. கன மழையை தாண்டியும் பலரது அலறல் சத்தம் கேட்க தொடங்கியது. இதனால் அருகில் இருந்த மக்கள் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். அதன் கழுகுப் பார்வை காட்சிகள் மனதை உலுக்கும் விதமாக உள்ளன. 

Wayanad : நிலச்சரிவால் மண்ணில் உயிரோடு புதைந்த மனித உயிர்கள்.! தோண்ட, தோண்ட மனித உடல்கள்-வயநாட்டில் கோரம்