விவசாயிகள் போராட்டம்: சம்பு தடுப்பணையில் மர்ம நபர்கள் தாக்குதல் - பாதுகாப்பு படையினர் காயம்!

விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில் சம்பு தடுப்பணையில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 25 பேர் காயமடைந்துள்ளனர்

First Published Feb 16, 2024, 5:51 PM IST | Last Updated Feb 16, 2024, 5:51 PM IST

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஓராண்டு காலத்துக்கு விவசாயிகளின் போராட்டம் நீடித்த நிலையில், தற்போது மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். அதேசமயம், சமூக சொத்துகளை சேதப்படுத்தவும் விவசாயிகள் போராட்டத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில், சம்பு தடுப்பணையில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அதனை சேதப்படுத்தினர். அப்போது, போலீசார் மீது மர்மநபர்கள் தொடர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் 18 பேர், துணை ராணுவப்படை வீரர்கள் 7 பேர் என மொத்தம் 25 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.