Viral Video : யானையில் வாலை பிடித்து திருகிய நபர்! பாகலை தூக்கி வீசிய யானை! - பதபதக்கும் வீடியோ!

கோவில் திருவிழாவில் யானையின் வாலை பிடித்து திருகிய நபரால், கோபமடைந்த யானை பாகனை தூக்கி வீசிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பீதியடைந்தனர்.
 

Share this Video

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காரியம் கரும்புகோணம் தேவி கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியின் ஊர்வலத்தில் இரு யானைகளை
பங்கேற்க வைத்துள்ளனர். இதில் பங்கேற்ற காஞ்சிரங்கோடு சேகரன் என்ற யானையின் வாலை, குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் திருகியதாக கூறப்படுகிறது. இதனால் கோவம் யானை தனது முன்னால் சென்று கொண்டிருந்த பாகன் ஒருவரை தும்பிக்கையால் தூக்கி எறிந்துள்ளது. பின்பு கூட்டத்தில் மிரண்டு ஓடியும் உள்ளது . பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதில் மொத்தமாக ஐந்து பேர் படுகாயங்கள் அடைந்து சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

யானையின் மற்றொரு பாகனின் துரித நடவடிக்கையால் ஒரு சில மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.மேலும் அந்த யானை பாகனை தாக்கும் காட்சிகளும் அதுபோல யானை மிரண்டு ஓடும் காட்சிகளும், பொதுமக்கள் அலறி அடித்து ஒடும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Related Video