மகனின் உத்வேகத்தால் மூன்று சக்கர வண்டியில் அயோத்திக்கு வந்த முதியவர்!

மகனின் உத்வேகத்தால் மூன்று சக்கர வண்டியில் முதியவர் ஒருவர் அயோத்திக்கு வந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது

Share this Video

அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவையொட்டி, ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அந்த அவகையில், உத்தரபிரதேச மாநிலம், பிரதாப்கர் நகரிலிருந்து முதியவர் ஒருவர் மூன்று சக்கர வண்டியில் வந்துள்ளார். இந்த வண்டி அரசு தனக்கு வழங்கியது என்றும், தாம் மாதம் 3 ஆயிரம் பென்சன் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதாகவும், மகன் யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பதாகவும், மகள் சாஃப்ட்வேர் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு அயோத்திக்கு வந்த போது இங்கு ஒன்றும் இல்லை என தெரிவித்த அவர், இப்போது திருவிழா போல் உள்ளது என்றார்.

Related Video