என்.சி.சி. மாணவர்களை கொடூரமாக தாக்கும் சீனியர்; வீடியோ வெளியாகி பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் என்.சி.சி. மாணவர்களை சீனியர் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Aug 4, 2023, 5:08 PM IST | Last Updated Aug 4, 2023, 5:08 PM IST

பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் அமைப்புகள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் என்.சி.சி. அமைப்பும் மாணவர்களின் ஒழுக்கத்திற்காக ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் செயல்பட்டு வருகிறது. இராணுவத்தில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் போன்று என்சிசி அமைப்பிலும் பல்வேறு அதிரடியான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

கட்டுப்பாடுகளை மீறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் மிகவும் மூர்க்கத்தனமாகவே இருக்கும். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் என்சிசி மாணவர்களை சீனியர் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய சீனியர் மாணவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Video Top Stories