பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து… பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!!

மைசூரில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

First Published May 29, 2023, 8:56 PM IST | Last Updated May 29, 2023, 10:42 PM IST

மைசூரில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம்  மைசூரில் இருந்து கொன்னேகால் நோக்கி, ஒரு தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இதேபோல் எதிரே கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நிலைத்தடுமாறிய கார் பேருந்து மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. ச்இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை அடுத்து காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்து நிகழ்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Video Top Stories