கேரளாவில் திடீரென மிரண்டு பொதுமக்களை அலறவிட்ட கோவில் யானை; வீடியோ வெளியாகி பரபரப்பு

கேரளா மாநிலம் ஷெர்னுரில் கோவில் திருவிழாவின் போது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட யானை திடீரென மிரண்டு ஓடியதால் உடன் சென்ற மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Share this Video

அதக அளவு வனப்பகுதியையும், மலைப் பகுதியையும் கொண்ட கேரளா மாநிலத்தில் யானைகள் அதிகம் வளர்க்கப்படுவதும், அந்த யானைகள் கோவில் திருவிழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் வழக்கம். அந்த வகையில் ஷெர்னுரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் யானை பங்கேற்றது.

அப்போது யானை பொதுமக்களுடன் சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென யானை மிரண்டு ஓட்டம் பிடித்தது. இதனால் அரண்டு போன பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நாளாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Video