ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு மோதிரம் கொண்டு வந்த அதிசய விருந்தினர் இவர்தான்!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா மும்பையில் இருக்கும் அவர்களது ஆண்டிலா வீட்டில் வியாழக் கிழமை நடைபெற்றது. திரையுலக மற்றும் விளையாட்டு பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

First Published Jan 20, 2023, 2:11 PM IST | Last Updated Jan 20, 2023, 2:11 PM IST

ஆனந்த் அம்பானியின் மூத்த சகோதரி இஷா அம்பானி தனது கணவர் ஆனந்த் பிரமல் உடன் கலந்து கொண்டார். மோதிரம் மாற்றுவதற்கான நேரம் நெருங்கியது.

அப்போது, "எங்களது ஒரு மோதிரம் காணாமல் போனது. அந்த மோதிரம் வைத்திருப்பவர் இங்கே வருவாரா'' என்று இஷா கூறிக் கொண்டு இருக்கும்போது, படிகளில் இறங்கி அவர்களது வளர்ப்பு நாய் வந்தது. அந்த நாயின் கழுத்தில் சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டு, அந்த ரிப்பனில் மோதிரம் வைக்கப்பட்டு இருந்தது. 

மேடையில் வளர்ப்பு நாய் ஏறவும், ஆகாஷ் அம்பானி நாயின் கழுத்தில் இருந்த மோதிரத்தை ஆனந்த் அம்பானி எடுத்து ராதிகா மெர்ச்சன்ட் விரலில் மாட்டினார். இது அங்கு கூடி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குஜராத்தி சடங்குடன் ஆனந்த் அம்பானி-ராதிகா நிச்சயதார்த்தம்! மணமகன் வீட்டில் கொடுக்கும் பொருள் என்ன தெரியுமா?

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சி.! வைரலாகும் சூப்பர் க்ளிக்ஸ் !!

Video Top Stories