Asianet News TamilAsianet News Tamil

சந்திரயான் 3 திட்டத்தை சாத்தியமாக்கிய சாதனை தமிழர்... யார் இந்த வீர முத்துவேல்?

சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் பற்றி இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கனவு திட்டம் தான் சந்திராயன். இந்த சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குனர்களாக தமிழர்கள் தான் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் சந்திரயான் 1 திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார். இதையடுத்து சந்திரயான் 2 விண்கலத்துக்கான திட்ட இயக்குனராக வனிதா என்பவர் பணியாற்றினார். இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான்.

தற்போது தயாராகி இருக்கு சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த வீர முத்துவேல் என்பவர் பணியாற்றி இருக்கிறார். அவரின் 29 துணை இயக்குனர்களும், பல்வேறு விஞ்ஞானிகளும் இணைந்து தான் இந்த சந்திரயான் 3 விண்கலத்தை தயார் செய்துள்ளனர். இந்தியாவின் பெருமைமிக்க இந்த விண்கலத்தை உருவாக்கி இருக்கும் விஞ்ஞானி வீர முத்துவேல் பற்றி இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

Video Top Stories