Video : வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.56 கோடி - எண்ணுவதற்கு 13மணி நேரம்! - அதிகாரிகள் தகவல்!
மகாராஷ்டிரா, ஜல்னாவில் இரும்பு வியாபாரியின் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனையில் ரூ.390 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னாவில் உள்ள இரும்பு வியாபாரியின் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ.56 கோடி ரொக்கம், 32 கிலோ தங்கம் உள்பட ரூ.390 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்தனர். ரொக்கப் பணத்தை எண்ணுவதற்கு மட்டும் 13 மணி நேரம் ஆனதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.