லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்ட உம்மன் சாண்டி உடல்

கேரளா மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Share this Video

கேரளா மாநில முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை உயிரிழந்தார். பின்னர் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அவரது உடல் எடுத்துவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட உம்மன் சாண்டியின் உடல் நேற்று மாலை புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கல்லறைத்தோட்டத்தில் அரசு மரியாதையின்றி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Video