ஆந்திரா லேபாக்ஷியில் வீரபத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி!
ஆந்திரா மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்கட்டமாக ஆந்திரா சென்றுள்ள பிரதமர் மோடி லேபாக்ஷியில் உள்ள வீர்பத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.