கடையின் சிசிடிவி கேமராக்களை உடைக்கும் போலீஸ் .. CAA ஏதிரான போராட்டத்தில்...! வெளியான அதிர்ச்சி வீடியோ!
கடையின் சிசிடிவி கேமராக்களை உடைக்கும் போலீஸ் .. CAA ஏதிரான போராட்டத்தில்...! வெளியான அதிர்ச்சி வீடியோ!
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல பகுதிகளில் போராட்டம் வன்முறையாக உருமாறியது.
இதில் உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு இடங்களில் நடந்தது.இந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 15 பேர் பலியாகினர் இந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் அத்துமீறினார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகம் எழுந்த வந்த நிலையில்,
இன்று இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்ப்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது
உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறையினர் சாலைகளில் உள்ள கடைகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை உடைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வைத்து எதிர்கட்சியினர் 'போலீஸ் செய்த இந்த செயல் யாரும் பார்க்க கூடாது என்று உடைத்துள்ளனர் என்று கூறி வருகின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது