Asianet News TamilAsianet News Tamil

No confidence motion: பிரதமர் மோடி அன்றே கணித்தார்; வைரலாகும் வீடியோ!!

பிரதமர் மோடி அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள்  நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 7, 2019-ல் நடந்தபோது, பிரதமர் மோடி பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், 2023ல் மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுவதைக் கேட்கலாம். முந்தைய ஆண்டு இதேபோன்ற ஒரு தீர்மானம் தோற்கடித்ததில் தனது அரசாங்கத்தின் வெற்றியைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
"எனது வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்... 2023ல் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் தயாராகுங்கள்" என மக்களவையில் பிரதமர் மோடி கூறியதும், ஆளும் கட்சி எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். 

பிரதமர் இவ்வாறு பேசும்போது, அவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற மூத்த கட்சித் தலைவர்கள் இருப்பது வீடியோவில் தெரிகிறது. 2018 ஆம் ஆண்டில், என் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மற்றும் பல எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசு வெற்றி பெற்றது. பிரதமர் மோடியின் "கணிப்பு" என்ற பெயரில் அரசு வட்டாரங்கள் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றன.

Video Top Stories