"இந்திய ராணுவ வீரர்கள் உள்ள இடமே எனக்கு அயோத்தி" - ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி! Video!

PM Modi Diwali Celebration : பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சாவுக்குச் சென்று பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார். பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் உடை அணிந்து பாதுகாப்பு படையினருடன் தனது நேரத்தை செலவிட்டார்.

Share this Video

பாதுகாப்பு படையினருக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி, அதன் பிறகு அவர்கள் மத்தியில் பேசிய அவர்.. "ராமர் இருக்கும் இடம் தான் அயோத்தி.. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் இடம் தான் எனக்கு அயோத்தி. கடந்த 30-35 ஆண்டுகளாக நான் உங்களோடு இல்லாதபோது தீபாவளி திருநாளை கொண்டாடியதில்லை"

"நான் பிரதமராகவோ அல்லது முதல்வராகவோ இல்லாதபோதும், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக எல்லைப் பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்" என்று கூறினார். 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது, ​​பிரதமர் மோடி ராணுவ வளாகங்களுக்குச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video