சட்டையில் வைத்திருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த செல்போன்; நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்

திருச்சூரில் 70 வயது முதியவரின் கைபேசி வெடித்து சட்டைப் பைக்குள் தீப்பிடித்து எரிந்ததில் அவர் உயிர் தப்பினார்.

First Published May 19, 2023, 11:04 AM IST | Last Updated May 19, 2023, 11:04 AM IST

கேரளா மாநிலம் திருச்சூரில் போனின் பேட்டரி சூடாகி வெடித்ததால் மரோட்டீச்சலைச் சேர்ந்த எலியாஸ் காயமின்றி உயிர் தப்பினார். 1,000க்கு வாங்கிய என்ட்ரி லெவல் போன் வெடித்து சிதறியது.

எலியாஸ் இங்குள்ள உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, ​​போன் வெடித்து அவரது சட்டைப் பைக்குள் தீப்பிடித்தது. சிசிடிவி காட்சிகளில் தொலைபேசி தீப்பிடிப்பதையும், எலியாஸ் தீயை அணைக்க துடித்த காட்சிகள் பதிவாகியுள்ளது.

Video Top Stories