வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தல்... ஓம் பிர்லா vs கே.சுரேஷ்; வென்றது யார்?
மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே.சுரேஷும் போட்டியிட்டனர்.
மக்களவை தேர்தல் அண்மையில் முடிவடைந்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்த நிலையில், புதிய மக்களவை உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அண்மையில் தொடங்கியது. அதில் புது எம்.பி.க்கள் பதிவியேற்றதை தொடர்ந்து சபாநாயகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இதுகுறித்து இரு தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டவில்லை.
இதனால் இந்திய வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகரை தேர்வு செய்ய முதன் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே.சுரேஷும் போட்டியிட்டனர். இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தின் போது சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றது யார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.