தெலங்கானா ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் இல்லை; கலெக்டருக்கு உத்தரவிட்ட நிர்மலா சீதாராமன்!!

தெலங்கானா ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் இல்லாததால், கோபமடைந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Share this Video

தெலங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்காதது ஏன் என அம்மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் வி. பாட்டீலிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய அவர், ''தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் ஒரு கிலோ அரிசியின் சந்தை விலை ரூ. 32-35 ஆக இருந்ததது. அப்போது, ​​​​மத்திய அரசு தனது பங்களிப்பாக சுமார் 28 முதல் 30 ரூபாயை கொடுத்தது. இதில், மாநில அரசின் பங்கு ரூ. 2 அல்லது 3 ஆகவும், பயனாளிகளின் பங்கு ரூ. 1 ஆக மட்டுமே இருந்தது'' என்றா. இதை அப்போது மாவட்ட ஆட்சியரும் ஒப்புக் கொண்டார். “மோடி அரசாங்கம் இப்போது போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தளவாடங்கள் உட்பட இலவச அரிசியை வழங்கி வருகிறது. ஆனால், தெலுங்கானா முழுவதும் பிரதமரின் போஸ்டர்கள் எங்கும் ஒட்டப்படுவதில்லை. ஓட்டினாலும் கிழித்து விடுகின்றனர் அல்லது நீக்கி விடுகின்றனர். இனிமேல் இதுபோன்று நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை நீங்கள் கொடுக்க வேண்டும், அடுத்த முறை வரும்போது உங்களைத்தான் கேட்பேன்'' என்றார்.

Related Video