அசாம் சென்ற பிரதமர் மோடி... 11,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள அசாம் சென்ற பிரதமர் மோடியை 11,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் பிஹு நடனம் ஆடி வரவேற்றனர்.

Share this Video

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள அசாம் சென்ற பிரதமர் மோடியை 11,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் பிஹு நடனம் ஆடி வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 14,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடக்கி வைத்தார். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதை அடுத்து பிஹு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குவஹாத்தியில் உள்ள சாருசஜாய் மைதானம் சென்ற அவரை சுமார் 11,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் பிஹு நடனம் ஆடி வரவேற்றனர். இதையடுத்து பிரம்மபுத்திரா ஆற்றின் மீது பாலஷ்பரி மற்றும் சூல்குச்சி இணைக்கும் ரயில் திட்டத்திற்கான பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 

Related Video