Asianet News TamilAsianet News Tamil

Watch : புதுவையில் செல்போன் கடையில் புதிய வகை மோசடி; கையும் களவுமாக பிடித்த கடைக்காரர்!!

புதுச்சேரியில் உள்ள மொபைல் கடையில் மொபைல் வாங்கிக் கொண்டு போலி பணம் பரிவர்த்தனை மொபைல் செயலி மூலம் பணம் அனுப்பி விட்டதாக நாடகமாடிய மயிலாடுதுறை வாலிபரை கடை ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

புதுச்சேரி அண்ணா சாலை உள்ள தனியார் மொபைல் கடைக்கு நேற்று முன்தினம் காலை 11:30 மணி அளவில் வாலிபர் ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார், அந்த வாலிபர் கடையில் ரூபாய் 18,000 மதிப்புள்ளான மொபைல் ஒன்றை வாங்கிக்கொண்டு பணத்தை ஜி-பே மூலம் அனுப்புவதாக கூறியுள்ளார். அதன்படி தனது மொபைல் போனிலிருந்து பணப்பரிவர்த்தனை செயலி மூலம் ரூபாய் 18,000 அனுப்பி உள்ளார். ஆனால் கடை உரிமையாளருக்கு பணம் அனுப்பியதற்கான குறுஞ்செய்தியோ அல்லது வங்கிக் கணக்கில் பணம் வந்ததற்கான தகவலோ எதுவும் வரவில்லை.


சந்தேகம் அடைந்து கடை உரிமையாளர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அதில் அவர் போலி பண பரிவர்த்தனை மொபைல் செயலின் மூலம் பணத்தை அனுப்பியதாக நாடகம் ஆடியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை மோழையூர், மேலவளி பகுதி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பதும், இவர் இதே பானியில் பல்வேறு இடங்களில் மோசடி செய்வது தெரிய வந்தது. மேலும் சத்தியமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories