தொடர் மழை எதிரொலி; மின் மாற்றியில் குடியேறிய மலைப்பாம்பு - வனத்துறையினர் துரித நடவடிக்கை

கேரள மாநிலம் கோழிகோட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மின் மாற்றியில் பின்னி பிணைந்து இருந்த பெரிய மலை பாம்பு பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. 

Share this Video

கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோழிகோடு அருகே மரடு பகுதியில் உள்ள மின் மாற்றி ஒன்றில் பெரிய மலை பாம்பு ஒன்று பின்னி பிணைந்து இருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்ட வசமாக மின்சாரம் தாக்காமல் இருந்த நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து அதனை மீட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Related Video