Viral Video : பெண்ணிடம் பொதுவெளியில் சர்ச்சை கேள்வி கேட்டு மிரட்டிய பாஜக எம்பி!

கடைநடத்தும் பெண்ணிடம், கணவர் இருக்கிறாரா? பொட்டு ஏன் வைக்கவில்லை? என கோலார் தொகுதி பாஜக எம்பி, மிரட்டல் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

First Published Mar 9, 2023, 1:43 PM IST | Last Updated Mar 9, 2023, 1:43 PM IST

கர்நாடக மாநிலம் கோலாரில் அத்தொகுதி எம்பி-யான பாஜகவைச் சேர்ந்த எஸ் முனுசாமி, சாலையோரம் கடைநடத்தும் பெண்ணிடம் தவறான கேள்விகளை கேட்டு மிரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அப்பெண்ணிடன்ம நெற்றியில் போட்டு எங்கே? உனக்கு கணவர் இருக்கிறார் தானே, ஏன் பொட்டு வைக்கவில்லை. காமன் சென்ஸ் வேண்டும், முதலில் பொட்டு வை என மிரட்டல் தொனியில் பாஜக எம்பி எஸ். முனுசாமி கேட்கிறார்.

பொட்டு வைப்பதும், வைக்காததும் அவரவர் விருப்பம்தானே என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். மாட்டு இறைச்சி வைத்துப் பிரச்சனை செய்து வரும் பாஜக, தற்போது பொட்டு வைக்கும் விசயத்திலும் பிரச்சனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்
 

Video Top Stories