கேரளாவின் முதல் திருநங்கையர் கல்யாணம்! காதலர் தினத்தில் மனம்முடித்த திருநங்கை ஜோடி!
கேரளாவின் முதல் திருநங்கையர் திருமணம் நேற்று நடைபெற்றது. காதர் தினமான நேற்று பிரவீன் மற்றும் ரிஷானா திருமணம் செய்து கொண்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தவர்கள் காதலர் தினத்தில் கரம் கோர்த்தனர். திருநங்கைகளான பிரவீனும், ரிஷானாவும் திருமணத்தின் மூலம் இணைந்தனர். பாலக்காடு, எலவாஞ்சேரியைச் சேர்ந்த பிரவின்நாத் பாடிபில்டர், கேரளாவின் கோட்டக்கல்லைச் சேர்ந்த ரிஷானா ஐஷு மிஸ் மலபார் பட்டத்தை வென்றவர்.