Watch : கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடால்புடலாக ஏற்பாடாகும் அசைவ விருந்து! ஆடு விற்பனை அமோகம்!

கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. தலைவர்களின் வருகையால் பிரச்சார கூட்டத்தில் மக்களை கவர அசைவ விருந்து வைக்கப்படுகிறது. இதனாலும் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி, ஆடு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
 

First Published Apr 22, 2023, 11:45 AM IST | Last Updated Apr 22, 2023, 11:45 AM IST

கர்நாடக மாநில தேர்தல் மேமாதம் நடைபெற உள்ளதையொட்டி, மாநில முழுவதும் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். முக்கிய தலைவர்களின் வருகையால் பிரச்சார கூட்டத்தில் மக்களை கவர அசைவ விருந்து அளிக்கப்படுகிறது. இதையொட்டி யாத்கிரி மாவட்டத்தில் சஹபுரா ஆட்டுச்சந்தையில் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனையாகி வருகிறது. சாதாரண காலங்களில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது தேவை அதிகரித்துள்ளதால் ஆட்டின் விலை 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Video Top Stories