சந்திரயான் 3 வெற்றி பெற செயற்கைகோள் மாதிரியை கடவுள் காலடியில் வைத்து இஸ்ரோ குழுவினர் சிறப்பு வழிபாடு

சந்திரயான் 3 செயற்கைக்கோள் வெற்றியடைய இஸ்ரோ தலைவர் சோமநாத் சூலூர் பேட்டை செங்காளம்மன் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.

Share this Video

ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள சூளூர்பேட்டையில் புகழ்பெற்ற செங்காளம்மன் கோவில் உள்ளது. இஸ்ரோ நிறுவனம் சார்பில் அதிகாரிகள், ஒவ்வொரு முறையும் விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கு முன் செங்காளம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். நாளை சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோமநாத் இன்று காலை செங்காளம்மன் கோவிலில் சந்திரன் 3 வெற்றியடைய வேண்டுதல் செய்து வழிபாடு நடத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதே போன்று சந்திரயான் 3 வெற்றி பெற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ குழுவினர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர்கள் சந்திரயான் 3 செயற்கைக்கோள் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் வைத்து வழிபாடு நடத்தினர்.

Related Video