Navy : ஹவாயின் பேர்ள் துறைமுகம்.. US நடத்தும் RIMPAC பயிற்சி - பங்கேற்கும் இந்திய கடற்படையின் P81 விமானம்!

Indian Navy Plane : வரலாற்று சிறப்புமிக்க பேர்ல் ஹார்பரில், அமெரிக்கா நடத்தும் ரிம் ஆஃப் தி பசிபிக் (RIMPAC) 2024, என்ற பயிற்சியில், இந்திய கடற்படையின் P81 விமானம், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Share this Video

Joint Base Pearl Harbour-Hickam (JBPHH) என்பது ஹவாய், ஓஹு தீவில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ தளமாகும். அங்கு நடைபெற உள்ள ராணுவ பயிற்சியில் ஈடுபடத்தான் இப்பொது இந்திய விமானம் அங்கு சென்றுள்ளது. ரிம் ஆஃப் தி பசிபிக் (RIMPAC) பயிற்சியின் 29வது பதிப்பில் பங்கேற்பதற்காக, தென் சீனக் கடல் மற்றும் வட பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்ட இந்தியவின் ஸ்டெலத் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஷிவாலிக், கடந்த மாதம் ஜூன் 29ம் தேதி ஹவாயில் உள்ள பேர்ல் துறைமுகத்தை சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்பொது நடைபெறும் இந்த RIMPAC-24கு, மூன்று துணை கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, முதல் இரண்டு துணை கட்டங்களில் கப்பல்கள் அடிப்படை மற்றும் மேம்பட்ட நிலை ஒருங்கிணைப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும். அதே போல இந்த RIMPAC-24ல், ஆறு வார கால தீவிர செயல்பாடுகள் மற்றும் பயிற்சியானது, நட்புறவான நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே, இயக்கத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Related Video