அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர்வீழ்ச்சியை சுற்றிப்பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

First Published Jul 11, 2023, 10:46 AM IST | Last Updated Jul 11, 2023, 10:46 AM IST

வால்பாறை அடுத்த கேரள எல்லையளான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று, இன்றும் பெய்த கனமழையின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் போல் நீர் ஆர்ப்பறித்துக் கொட்டுகிறது. இது தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இந்தப் பகுதியில் வால்பாறை சோலையார் அணையில் இருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் பெருக்கெடுத்து வரும் ஆற்றுத் தண்ணீர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைகிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கரைபுரண்டு ஓடும் வெள்ள பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Video Top Stories