சபரிமலை பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு, திரிவேணி பாலத்தை ஒட்டி செல்லும் வெள்ளம்

கேரளா  மாநிலத்தின் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சபரிமலை பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் திரிவேணி பாலத்தை வெள்ளநீர் தொட்டுச் செல்கிறது.

First Published Jul 8, 2023, 11:21 AM IST | Last Updated Jul 8, 2023, 11:21 AM IST

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 2 அணைகள் திறக்கப்பட்டதில் இருந்து தண்ணீர் பம்பை ஆற்றில் தண்ணீர் கரைப்புரண்டு ஓடுகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொச்சுபம்பா மற்றும் காக்கி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்காக பக்தர்கள் ஆற்றைக் கடந்து செல்லும் திரிவேணி ஆற்றில் திரிவேணி பாலத்தை வெள்ளநீரானது தொட்டுச் செல்கிறது. தற்போது கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் இல்லை. 

இந்த நிலையில் பம்பை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கபடுவதற்கு முன்பாக சீரமைப்பு பணிகள் அனைத்தும் நடைபெறும் என்று பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Video Top Stories