Watch : யானை பிடிக்காமல் மக்களை இடம்மாறக் கூறிய தீர்ப்பை எதிர்த்து இடுக்கியில் மக்கள் போராட்டம்!
யானையை பிடிக்கும் நடவடிக்கைக்கு சாதகமாக இல்லை என்றும், மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க 301 காலனியில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும் என் நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள 13 பஞ்சாயத்துகளில் யானைகளின் தாக்குதலை நிரந்தரமாக தவிர்க்கும் வகையில் குடியிருப்பவர்களை அவர்களது கிராமங்களில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானைகளைப் பிடித்து யானைகள் முகாம்களில் வைக்கும் யோசனைக்கு உயர்நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்ததால், யானையைப் பிடிப்பது குறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.