எச்சில் துப்பியதால் இளைஞருக்கு வந்த வினை... அதிகாரிகள் கொடுத்த வினோத தண்டனை..!

சாலையில் சிறுநீர் கழிப்பவர்கள், எச்சில் துப்புபவர்கள் ஆகியோரை கண்டறிந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை சூரத் நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

First Published Aug 30, 2019, 2:31 PM IST | Last Updated Aug 30, 2019, 2:31 PM IST

மக்கள் நலனில் போக்குவரத்து காவல்துறையும்,அரசாங்கமும்  எவ்வளவுதான் அக்கறை காண்பித்தாலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு கொண்டு வந்தாலும் இன்றளவும் அதனை கடைப்பிக்காமல் செல்லும் நபர்களை சாலைகளில் பார்க்க முடிகிறது.அதேவேளையில் குஜராத் மாநிலம் சூரத் நகராட்சி சாலையில் அசுத்தம் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சமீபத்தில் கொண்டு வந்தது குஜராத் அரசு.

சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் சாலையில் சிறுநீர் கழிப்பவர்கள், எச்சில் துப்புபவர்கள் ஆகியோரை கண்டறிந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை சூரத் நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் சில மாதங்களுக்கு முன்னர் சாலையில் எச்சில் துப்பிய நபரை,  நகராட்சி அதிகாரிகள் சாலையை சுத்தம் செய்யும் தண்டனையை கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அத்வாலினிஸ் நகரில் இது போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் சென்ற நபர் சாலையில் எச்சில் துப்பியபடி சென்றுள்ளார். அவரை வளைத்துப் பிடித்த அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அதிகாரிகள் தண்டனையாக அவரை தோப்புகரணம் போட விட்டனர்  . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.