பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று தெலங்கானாவில் அனுமார் கோவிலை சுத்தம் செய்த தமிழிசை

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அம்மாநிலத்தில் உள்ள அனுமார் கோவிலை சுத்தம் செய்தார்.

Share this Video

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வருகின்ற 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனை மிகப்பெரிய விழாவாக கொண்டாடும் முனைப்பில் பாஜக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு பிதமர் மோடி அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் பாஜகவைச் சேர்ந்த பலரும் அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களை சுத்தம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஹைதராபாத்தில் அமைந்துள்ள அனுமார் கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

Related Video