இந்து மத அடையாளங்களை மறைக்க முயற்சிக்க வேண்டாம்; தமிழிசை கோரிக்கை
இந்து மத அடையாளங்களை மறைக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளங்கள் தான். சிலர் தங்களுக்கு தேவையான பொழுது தேவையான வகையில் அடையாளங்களை மாற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால், இனிமேலும் இந்து மதம் தொடர்பான அடையாளங்களை மாற்றவோ, மறைக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனுக்காக தான். மக்களின் நலனுக்காக தான் மின் வாரியம் தனியார்மயமாக்கப் படுகின்றது. அப்படி மாற்றம் செய்யப்பட்ட பின்னர் மின் கட்டணம் குறையும், மின் திருட்டு நிறுத்தப்படும், மின் தட்டுப்பாடு இருக்காது. இதுபோன்ற காரணங்களால் தான் மின் துறையை தனியாருக்கு மாற்றம் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.