ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி எறிந்த நபர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் ஓடும் காரில் இருந்து ஒருவர் கரன்சி நோட்டுகளை வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் சமீபத்தில் வெளியான ஃபர்ஸி என்ற வெப் தொடரின் காட்சியை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியது.
இதற்கிடையில், பணத்தை வீசிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏசிபி விகாஸ் கௌசிக் தெரிவித்துள்ளார். இதன் முக்கிய குற்றவாளியான யூடியூபர் ஜோராவர் சிங் கல்சி மற்றும் அவரது நண்பர் குர்பிரீத் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ஏடிஎம்மில் இருந்து பணம் மட்டுமா.? இனி பிரியாணியும் கிடைக்கும்.! சென்னையில் சூப்பரான வசதி அறிமுகம்இதையும் படிங்க..டேட்டிங் ஆப் மூலம் நெருக்கமான காதல் ஜோடி.. கடைசியில் எல்லாத்தையும் முடிச்சுட்டு.!! இப்படியா பண்றது.!