Video: திடீரென படியில் விழுந்து வணங்கிய கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் - ஏன் தெரியுமா?
அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் சட்டசபை அருகே உள்ள படியில் விழுந்து வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சித்தராமையாவுக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதேபோல, கர்நாடக மாநில துணை முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கும், அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவ்விழாவில் அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கமல் ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் பதவியேற்ற பின்னர் அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக இவர்கள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் சட்டசபை சென்றனர். அப்போது டி.கே. சிவகுமார் திடீரென விதான் சபையின் படியில் விழுந்து வணங்கினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?