கிருஷ்ணா நதியா? முதலை பண்ணையா? மனிதர்களை பார்த்ததும் கூட்டம் கூட்டமாக ஆற்றுக்குள் பாய்ந்த முதலைகள்
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம், கிருஷ்ணா நதி மாவட்டத்தின் வலது புறத்தில் பரவலாக ஓடுகிறது. முதலைகள் அடிக்கடி உணவுக்காக ஆற்றங்கரைக்கு வரும். அந்த வகையில் நேற்றும் முதலைகள் கூட்டம் காணப்பட்டது, கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ரெய்ச்சூர் தாலுகாவில் உள்ள குர்வகுலா கிராமம் அருகே ஓடும் ஆற்றின் கரையில் உள்ள பாறையில் 12க்கும் அதிகமான முதலைகள் காணப்பட்டன. அப்போது கிராம மக்கள் தத்தாத்ரேய க்ஷேத்ர சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்தனர். சுற்றுலா பயணிகள் படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்ட போது பாறைகளில் முதலைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. இந்த காட்சியை பார்த்த மக்கள் அலறி கூச்சலிட்டதால் முதலைகள் உடனடியாக ஆற்றில் இறங்கின.