சந்திரயான் 3 செயற்கைகோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!
சந்திரயான் - 3 செயற்கைகோள் LVM3-M4 மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் - 3 செயற்கைகோள் LVM3-M4 மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததையடுத்து, சந்திரயான் 3 வெற்றிகரமாக LVM3-M4 ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டது. பின்னர் 179 கிலோ மீட்டர் தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்து நிலவுக்கான பயணத்தை சந்திரயான் 3 தொடங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.