தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட பெண்..! பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..
டெல்லியில் சங்கிலி பறிக்க முயன்று பொதுமக்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..
டெல்லியில் நாங்லோய் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (30.08.19) அன்று சரியாக மாலை 3.41 மணியளவில் ஒரு பெண்ணும் அவரது மகளும் ரிக்ஷவில் வந்து இறங்கி சாலையை கடக்க முயன்றனர்.
அப்பொழுது அவர்களை நோக்கி வந்த ஒரு பைக்கில் இரண்டு வழிப்பறி கொள்ளையர்கள் அந்த பெண்ணின் சங்கிலியை பறிக்க முயன்றான். சுதாரித்து கொண்ட அந்த பெண் உடனே சங்கிலி திருடனின் கையை இழுத்தும் கூச்சலிட்டதில் திருடர்கள் நிலைத்தடுமாறி பைக்குடன் கீழவிழுந்ததும் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் வசமாக மாட்டிக்கொள்ள பைக் ஓட்டி வந்த கொள்ளையனின் கூட்டாளி தப்பி ஓடினான்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சூழ்ந்து சிக்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததை அடுத்து வெளியாகியுள்ளது.