Watch : உ.பி.,யில் பாஜக பிரமுகர் ஶ்ரீகாந்த் தியாகியின் ஆக்கிரமிப்புகள் புல்டோசர் கொண்டு இடிப்பு!

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள கிராண்ட் ஓமேக்ஸ்சில் பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி செய்த ஆக்கிரமிப்புகள் புல்டோசர் கொண்டு அகற்றப்பட்டன. சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 

First Published Aug 8, 2022, 11:54 AM IST | Last Updated Aug 8, 2022, 12:12 PM IST

சட்டவிரோத ஆக்கிரமிப்பு வழக்கில் தலைமறைவாகியுள்ள பாஜக பிரமுகர் ஶ்ரீகாந்த் தியாகியின் வீட்டை, நொய்டா குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தனர்.

நொய்டாவின் செக்டார் 93B-ல் Grand Omaxe வளாகத்தில் ஶ்ரீகாந்த் தியாகி வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கும் அதே குடியிருப்பில் வசித்து வரும் ஒரு கட்டிட குடியிருப்பாளருக்கு இடையேயான சண்டையின் மூலம் இந்த சட்டவிரோத அத்துமீறல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை புல்டோசர் உடன் வந்த அதிகாரிகள் ஶ்ரீகாந்த் தியாகியின் வீட்டை இடித்து தள்ளினர். அப்போது அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக ஶ்ரீகாந்த் தியாகிக்கு கடந்த 2019-ல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இடிக்கப்படுவதைத் தடுக்க ஶ்ரீகாந்த் தியாகி தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது என அதிகாரிகள் தெவித்துள்ளனர். ஶ்ரீகாந்த் தியாகி ஆட்சியில் இருக்கும் பாஜக கட்சியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார் என்று சொசைட்டிவாசிகள் தெரிவித்துள்ளனர். 

Video Top Stories