திருப்பதியில் பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

Share this Video

பீகார் மாநில முன்னாள் முதல்வர் தம்பதி லல்லு பிரசாத் யாதவ், ரஃப்ரி தேவி ஆகியோர் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை திருப்பதி கோவிலில் வழிபட்டனர். சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் திருமலையில் இரவு தங்கி இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவர்களுக்கு வேத ஆசி வழங்கினர்.

Related Video