Exclusive | சிறு விவசாயியின் வயலில் கிடைத்த கல்லில் பிறந்த 'ராம் லல்லா' - சிற்பி அருண் யோகிராஜ் நெகிழ்ச்சி

உலகமே காண எதிர்பார்த்திருக்கும் அயோத்தி ராம் லல்லா சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ், ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் ஆசிரியர் அஜித் ஹனமக்கனவருக்கு அளித்த பிரத்தியேக நேர்காணல் இதோ..
 

First Published Jan 20, 2024, 11:55 AM IST | Last Updated Jan 20, 2024, 11:55 AM IST

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, ராம் லல்லா சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ் கூறுகையில், தான் தொடர்ந்து கல் வழியாக ராம் லல்லாவைத் தேடிக் கொண்டிருந்தேன், இறுதியாக அவர் தனக்கு தரிசனம் கொடுத்தார் என உணர்ச்சிப் பூர்வமாக தெரிவித்தார். ராம் லல்லா எல்லோருக்கும் பிடித்திருந்தால், அதைவிட பெரிய சந்தோஷம் தனக்கு இல்லை என்றார்.

'தன் தேவைக்கேற்ப எனக்கு ஒரு புதிய கொட்டகையில், சரயு ஆற்றின் மண்ணின் மேல், தான் மகிழ்ச்சியாக சிலையை செதுக்கியதாகவும், 'ஒரு சிறு விவசாயியின் வயலில் கிடைத்த கல்லில் கடவுள் செதுக்கப்பட்டிருக்கிறார் என்றும் அருண் யோகிராஜ் தெரிவித்தார்.