இரவு விடுதியில் குத்தாட்டம் போட்டு புத்தாண்டை வரவேற்ற அமைச்சர் ரோஜா

புத்தாண்டு நாளன்று இரவு பெங்களூருவில் விடுதி ஒன்றில் நடனம் ஆடிய ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா.

Share this Video

திரைப்பட நடிகையாக இருந்து அரசியலில் நுழைந்து அமைச்சராக ஏற்றம் கண்டவர் ரோஜா. ஆந்திர அரசியலைப பொறுத்தவரை பரபரப்பான செயல்பாடுகள், அதிரடி பேச்சுகள் ஆகியவை ரோஜாவுக்கே சொந்தம். இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ரோஜா ஆங்கில புத்தாண்டு தினத்தில் பெங்களூரில் உள்ள பப் ஒன்றில் இரவு நேரத்தில் நடனமாடிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் ஆட்சியில் இருப்பவர்களும் அவருடைய சொந்த கட்சியினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினர் ரோஜாவின் இரவு நேர நடன காட்சிகளை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் இப்படி செயல்படலாமா என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Video