நெருங்கி வந்த ரயில்.. நூலிழையில் தப்பிய முதல்வர் சந்திரபாபு நாயுடு - என்ன நடந்தது?

Chandrababu Naidu : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு நூலிலையில் ரயிலில் இருந்து தப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

First Published Sep 6, 2024, 8:00 PM IST | Last Updated Sep 6, 2024, 8:00 PM IST

அண்மையில் கேரளாவில் பருவ மழை பெரிய அளவில் பெய்து, பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 350க்கும் மேற்பட்ட மக்கள் அதில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விஷயம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், அதன் சுவடு மறைவதற்குள் இப்பொது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டு வருகின்றது.

கடந்த சில வாரங்களாகவே தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சூழலில் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த நாட்களாகவே பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார். 

இந்நிலையில் அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வெள்ளசேத பணிகளை ஆய்வு செய்து வந்த நிலையில் அங்கிருந்த ரயில்வே பாலம் ஒன்றையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் நின்று கொண்டிருந்த ரயில் பாலத்தில் எதிரே ஒரு ரயில் வந்துள்ளது. அதை கண்ட முதல்வரது பாதுகாப்பு அதிகாரிகள், அவரை அந்த பாலத்தில் இருந்த பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்றனர். ரயிலும் அதன் பிறகு மெதுவாக இயக்கப்பட நிலையில் முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பாத்திரமாக அங்கிருந்து புறப்பட்டனர்.