வால்பாறை அருகே தும்பிக்கை இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் வாழ்க்கைக்காக போராடும் யானை!!
வால்பாறை அருகே அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாத குட்டி யானை மீண்டும் வருகை.
வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் தும்பிக்கை இல்லாத குட்டியானை மீண்டும் வருகை தந்த நிலையில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரப்பள்ளி வனப்பகுதியின் ஓரம் தாயுடன் சுற்றிய தும்பிக்கை இல்லாத குட்டியானையை சுற்றுலா பயணிகள் பார்த்தனர் பின்னர் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்து வனத்துறையினர் அதை ஆய்வு செய்தபோது குட்டி யானை தண்ணீர் குடிக்கும் பொழுது முதலை கடித்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.
குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குட்டி யானை கூட்டமாக வந்ததால் வனப்பகுதிக்கு சென்றது. அதேபோல் சில மாதங்களுக்கு பின்பு வனப்பகுதி ஓரம் மீண்டும் வனத்துறையினர் பார்த்து ஆய்வு செய்தனர். தற்போது இன்று காலை அதிரப்பள்ளி காலாடி பிளாண்டேஷன் ரப்பர் தோட்டத்தில் அருகே யானையை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
அதை வனத்துறையினர் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்ததில் குட்டி யானை நலமுடன் உள்ளது. உடல்நிலை தேறி உள்ளதும் தெரியவந்தது. குட்டி யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.