அக்னிபத் திட்டம், திறமையான மனித வளத்தை உருவாக்கும் முயற்சி - Naukri நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி கருத்து

ஏசியாநெட் நடத்தும் சம்வாத் நிகழ்ச்சியில் Naukri.com நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி விருந்தினராக கலந்து கொண்டார். இவரது நிறுவனத்தில் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் Shadi.com, 99acers.com போன்றவை குறிப்பிடத்தக்கது.
 

First Published Jun 27, 2022, 10:46 AM IST | Last Updated Jun 27, 2022, 10:46 AM IST

ஏசியாநெட் நியூஸ்-ன் 'சம்வாத்' நிகழ்சி, சமூகத்திற்கு பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை, naukri.com நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி கலந்துகொண்டார். மேலும், அவரது நிர்வாகத்தின் கீழ் shadi.com , 99acers.com போன்ற இ-காமர்ஸ் தளங்கள் திறம்பட இயங்கிவருகின்றன.

நம் சம்வாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மத்திய அரசின் அக்னிபத் திட்டம் குறித்து கூறியதாவது, அக்னிபத் திட்டம் ஒரு சிறந்த முயற்சி என்றார். இதில் பணிபுரிந்துவிட்டு வெளிவரும் இளைஞர்களின் தனியார் துறை வேலை வாய்ப்புகளை மேலும் பிரகாசமாக்கும், ராணுவ பயிற்சியின் மூலம் இளம் வயதிலேயே கட்டுப்பாடு, கூட்டு முயற்சி போன்ற திறன்களை பெறுவார்கள். ஏனெனில், ஒரு பணியை செய்துமுடிக்க ஒரு கூட்டு முயற்சி தேவை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செயல்பட வேண்டும்.

இன்று முதல் 'அக்னிபத்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்கள் இதோ !!

அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் தீயணைப்பு வீரர்கள் இத்தகைய பயிற்சியை பெறுகின்றனர். ஆனால், ஒரு சாஃப்ட்வேர் நிறுவன வேலைவாய்ப்பில் எந்தவொரு சிறப்புத்திறனும் அவர்களுக்கு கிடைக்காமல் போகலாம். அக்னிபத் திட்டத்தில் சேர்ந்த இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் பெரும் முதுமை அடையமாட்டார்கள். அதே நேரத்தில் அந்த இளைஞர்கள் நாட்டின் உற்பத்தி திறன் விகிதத்தை அதிகரிக்க உதவும் திறன்களை பெறுவார்கள்

Video Top Stories