கர்நாடகாவில் 2 பேரை கொன்ற காட்டு யானை 5 கும்கிகளின் உதவியுடன் பிடிபட்டது
ராமநகரில் 2 பேரை கொன்ற காட்டு யானையை 5 கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். அந்த யானை லாரியில் ஏறாமல் முரண்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடாக மாநிலத்தில் 2 பேரை கொன்ற காட்டு யானை இன்று 5 கும்கிகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது. பின்னர் லாரியில் ஏற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் லாரியில் ஏறாமல் அந்த யானை முரண்டு பிடித்தது. லாரியில் ஏற மறுத்ததுடன், ஆக்ரோஷமாகவும் காணப்பட்டது. இதையடுத்து, யானையின் உடலில் கயிறுகளை கட்டி, கிரேன் மூலமாக லாரியில் தூக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த காட்டு யானை லாரியில் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, அந்த யானை ஆக்ரோஷமாகவே இருந்தது. பின்னர் கிராமத்தில் இருந்து அந்த யானை கொண்டு செல்லப்பட்டது. கடந்த 2 வாரங்களாக அட்டகாசம் செய்ததுடன், 2 பேரை கொன்ற யானை பிடிபட்டதால் ராமநகர் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.