திடீரென பின்னோக்கி நகர்ந்த கார்; சூப்பர்மேனாக மாறி பெரும் விபத்தை தவிர்த்த இளைஞர்

கேரளா மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் தாமாக பின்னோக்கி வந்த நிலையில் அதனை துரிதமாக செயல்பட்டு நிறுத்திய இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

First Published Jun 9, 2023, 1:56 PM IST | Last Updated Jun 9, 2023, 1:56 PM IST

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட கோட்டக்கல் பகுதியில் சாலையோரம் ஒருவர் தனது சொகுசு காரை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றார். அப்போது திடீரென கார் தானாக பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

இதனால், பெரும் விபத்து நிகழும் என அனைவரும் அதிர்ச்சியோடு உற்று பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனம் ஒட்டி வந்த இளைஞர் ஒருவர், திடீரென என தனது வாகனத்தை சாலையிலே நிறுத்திவிட்டு கார் அருகே ஓடிச் சென்று கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கார் பின்னோக்கி நகருவதை நிறுத்தினார்.  

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், காரின் உரிமையாளர் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் இரு சக்கர வாகன ஓட்டியை வெகுவாக பாராட்டினர்.  இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சி  சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Video Top Stories