Viral video : விடிய விடிய ஊருக்குள் சுற்றிய காட்டு யானை! - பீதியடைந்த மக்கள்!
மைசூர் அருகே காட்டு யானை ஒன்றுஉணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்து விடிய விடிய சுற்றியதால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் H.d.கோட்டை தாலுகா பூதனூர் கிராமத்தில் காட்டு யானை ஒன்று புகுந்தது. கிராமத்திற்க்கு நாகர்ஹோலே வனப்பகுதியில் இருந்து வந்த தனி காட்டு யானை ஒன்று அங்கு வளர்ப்பு பிராணிகளையும் அந்த கிராம மக்களையும் மிரட்டியது தொடர்ந்து விடியும் வரை அந்த யானை கிராமத்திலேயே முகாமிட்டதால் கிராம மக்கள் பீதியடைந்தனர். பிறகு வனத்துறை அதிகாரிகள் இன்று காலை வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.