மகாராஷ்டிராவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

First Published Oct 17, 2023, 10:50 AM IST | Last Updated Oct 17, 2023, 10:50 AM IST

மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லூன் நகரில் மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துள்ளானது. பாலத்தில் தூண் ஒன்று இடிந்து விழுந்த சிறிது நேரத்திலேயே, மேம்பாலத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கிரேன் இயந்திரம் சேதமடைந்தது. பெரும் சத்ததுடன் பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். விபத்தையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Video Top Stories